search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் சினிமா"

    • சினிமா துறையை பொறுத்தவரை பாலியல் தொடர்பான பிரச்சனை இல்லாத காலக் கட்டங்களே இல்லை.
    • குற்றம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

    கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பாலியல் விவகாரம் குறித்து ஹேமா கமிட்டியில் உறுப்பினராக இருந்தவரும், மூத்த நடிகையுமான சாரதா கூறியதாவது:-

    மலையாள திரையுலகம் மட்டுமின்றி சினிமா துறையை பொறுத்தவரை பாலியல் தொடர்பான பிரச்சனை இல்லாத காலக் கட்டங்களே இல்லை. எனது காலக்கட்டத்தில் இதுபோன்ற பிரச்சனைகளில் நடிகைகள் மவுனம் காத்தனர். அவமானம், பயம், எதிர்காலம் குறித்தான சிந்தை காரணமாக பலரும் தமக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே சொல்லாமல் மவுனம் காத்தனர். கல்வி அறிவில் சிறந்த தற்போதைய தலைமுறைக்கு அவர்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல எந்த பயமும் இல்லை. ஆனால் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து நடிகர்களுக்கு எதிராக தற்போது நடிகைகள் வெளியிட்டு வரும் குற்றச்சாட்டுகள் வெறும் ஷோ மட்டுமே. சிலர் கூறுவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. தற்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரே விஷயம் வயநாடு பேரிடர் பற்றி மட்டுமே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மலையாளத்தில் மூத்த நடிகையான ஷீலா கூறியதாவது:-

    நடிகைகள் தாங்கள் சந்தித்து வரும் மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக கூற முன் வரவேண்டும். எனக்கு அதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை. ஆனால் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் நடந்த மோசமான அனுபவங்கள் குறித்து சக நடிகைகள் கூறி இருக்கிறார்கள். அன்றைய காலக்கட்டத்தில் இதுபோல் வெளிப்படையாக கூற வேண்டிய வாய்ப்பு, தேவைகள் இல்லாமல் இருந்தது. எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்களது பெயர்களை மட்டும் குறிப்பிடுவது ஏன்? என்று தெரியவில்லை.

    குற்றம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். திரைப்பட துறையில் பெண்களுக்காக எத்தனையோ நல்ல செயல்களை நடிகைகளின் பெண்கள் அமைப்பினர் செய்து வருகிறார்கள், அவர்களை பாராட்டுகிறேன். ஹேமா கமிட்டியை அமைத்து, நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக பேச வாய்ப்பு தந்த அரசுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
    • தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும்.

    சென்னை:

    ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சினிமாவில் நடிக்க வரும் பெண்கள், மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும். தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதை போன்று தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டலை அறிய கமிட்டி அமைக்கப்படும்.

    தமிழ் சினிமாவில் 10 பேர் கொண்ட குழுவுடன் ஒரு கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெறுகிறது. தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டல் நடக்கிறதா இல்லையா என்று என்னால் செல்ல முடியாது.

    சினிமாவில் நடிக்க வரும் பெண்களில் 20% பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. 80% பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுவோரை, செருப்பால் அடிக்க வேண்டும். எந்த பிரபலமாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

    • கேரளாவில்தான் பெண்கள் அதை துணிச்சலாக எதிர்கொள்ள முன்வந்தனர்.
    • ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு ஆணுக்கு விருப்பம் ஏற்படுகிறது.

    மலையாள நடிகைகளுக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியிலான கசப்பான அனுபவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடிகை ஊர்வசி கேரளாவில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் 9 வயதில் இருந்து சென்னையில் தான் வளர்ந்தேன். எனது சினிமா வாழ்க்கை தமிழில் இருந்து தான் தொடங்கியது. அடுத்து தெலுங்கு, கன்னடம் என கடைசியாகத்தான் மலையாளத்திற்கு வந்தேன். நான் திரைப்படத்துறைக்குள் வரும்போதே எனக்கு முன்னோடியாக இருந்த சில நடிகைகள் இந்த மாதிரியான பாலியல் தொல்லை பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சனை சினிமா உலகத்தில் புதிதாக இப்போது தோன்றியது அல்ல. ஆனால் தற்போது திரைத்துறையில் உள்ள பெண்களின் பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு அரசு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

    கேரள சினிமாவில்தான் இப்படி அதிகமாக நடக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. வட இந்தியாவில் படிப்பறிவு இல்லாதவர்கள் பெண்கள் மீது நடத்தும் பாலியல் கொடுமையோடு ஒப்பிடும்போது கேரளா முன்னேறித்தான் இருக்கிறது. எல்லா மாநிலத்திலும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன.

    ஆனால் கேரளாவில்தான் பெண்கள் அதை துணிச்சலாக எதிர்கொள்ள முன்வந்தனர். எதிர்த்து குரல் கொடுத்தனர். இங்கே முற்போக்கான பெண்கள் அதிகம் உள்ளதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனிமேல் யாரும் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக வெளிப்படையாக போராடுகின்றனர்.

    தமிழ் சினிமாவிலும் இதே மாதிரியான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால் அதை வெளிப்படையாக பேச யாரும் முன்வரவில்லை. அதனால் அங்கே எதுவுமே நடக்கவில்லை என சொல்ல முடியாது. சினிமாவில் வேலை செய்யும் பெண்கள் நூற்றுக்கணக்கான நபர்களுடன் தான் சேர்ந்து வேலை செய்கிறோம். ஆனால் தனிப்பட்ட சந்திப்பின் போதுதான் இப்படியான சீண்டல்கள் நடக்கின்றன. அப்படியென்றால் பெண்கள் சந்திப்பை பொது இடத்தில் நடத்த வேண்டும்.

    ஒரு ஓட்டல், ரெஸ்டாரண்ட், காபி ஷாப் போன்ற இடங்களில் சந்தித்து பேசுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் வீட்டுக்கோ, அலுவலகத்திற்கோ வர முடியாது என சொல்ல வேண்டும். அதை ஒரு விதிமுறையாகவே சினிமா சார்ந்த சங்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி மீறி தனிப்பட்ட சந்திப்பு நடந்தால், அதற்கு சங்கம் பொறுப்பு அல்ல என சொல்ல வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால், யாரும் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைக்க மாட்டார்கள்.

    நாம் ஒரு பொதுவான விதியைத்தான் உருவாக்க முடியும். யார் நல்லவர்? யார் கெட்டவர்? என தேடிப்பார்த்து சட்டம் வகுக்க முடியாது. ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்து விட்டார் என்பதால் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. அது விசாரிக்கப்பட வேண்டும். சிலர் ஒருவரின் நன்மதிப்பைக் கெடுக்கவும் கூட பொய்யான புகாரை அளிக்கலாம். எனவே எந்த விஷயமாக இருந்தாலும் விசாரணை தேவை. அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் விசாரணை முக்கியம்.

    ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு ஆணுக்கு விருப்பம் ஏற்படுகிறது. அவளது விருப்பத்தைக் கேட்பதில் தவறில்லை. உடனே அதையே பாலியல் சீண்டல் என சொல்லக்கூடாது. அந்த ஆண் அதையே ஒரு தொழிலாக வைத்து பலரை பின் தொடர்வது தவறானது. பெண் மீது தாக்குதல் நடத்துவது குற்றம். இதனால் ஒரு தொழிலே முடக்கப்படுகிறது என்றால் தான் அது பிரச்சனை. அப்போது தான் பெண்கள் புகார் அளிக்கிறார்கள். அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
    • ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் பங்கேற்று வருகிறார்.

    பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை ரம்பா. விஜயவாடாவில் பிறந்த ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.

    தனது 15 வயதில் மலையாள படத்தின் மூலம் சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்தார் ரம்பா. அதை தொடர்ந்து தெலுங்கில் நடித்தார். தமிழில் 'உழவன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரம்பா. அப்படத்தை தொடர்ந்து 'உள்ளத்தை அள்ளித்தா', 'சுந்தர புருஷன்', 'செங்கோட்டை', 'விஜபி', 'அருணாச்சலம்', 'காதலா காதலா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

    கடைசியாக 'பெண் சிங்கம்' என்ற படத்தில் நடித்த ரம்பா, 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    100 படங்களுக்கு மேல் நடித்த இவர், தற்போது திரையுலகிலேயே தலைகாட்டாமல் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் பங்கேற்று வருகிறார். மேலும், சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரம்பா அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜயை, ரம்பா குடும்பத்துடன் சந்தித்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை ரம்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டேன். அதற்கு பின் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி ஏற்பட்டு விட்டது. நடித்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என பலரும் கேட்கின்றனர். எனக்கு பிடித்தமான கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.
    • இப்படம் வரும் 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது.

    மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது Deadpool & Wolverine என்ற படம் வெளியாக உள்ளது.

    ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் வரும் வாரம் வெளியாகவுள்ள டெட்பூல் & வோல்வரின் படத்திற்கான கொண்டாட்டங்களில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாவதை ஒட்டி ஐதராபாத்தில் இப்படத்தின் மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஹக் ஜேக்மேன் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உள்ளனர்.
    • தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    ஜூன் 2 அன்று நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உள்ள நிலையில் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு பவன் என்று சிவகார்த்திகேயன் பெயர் சூட்டியுள்ளார்.

    தனது 3வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டிய, அந்நிகழ்வின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
    • இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை.

    2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.

    அண்மையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. .

    இந்நிலையில், 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    ஆனால் இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை. இப்படத்தை ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக வேறொரு இயக்குநர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

    அதே சமயம் திரிஷாவை வைத்து மாசாணியம்மன் என்ற படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53).
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53). கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    1971-ம் ஆண்டு பிறந்த இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் மலையாள திரையுலகில் கால்பதித்தார். அதன்பிறகு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

    கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா நடித்த 'கபடி கபடி' திரைப்படத்தை இயக்கி சுதீர் போஸ் இயக்குனரானார். இந்த படத்தில் நாதிர்ஷா இசையமைப்பில் நடிகர் கலாபவன் மணி பாடிய 'மின்னாமினுங்கே' என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. இதன் மூலம் சுதீர் போஸ் இயக்கிய 'கபடி கபடி' படம் கொண்டாடப்பட்டது.

    இவருக்கு ப்ரீதா என்ற மனைவியும், மிதுன் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரம் பதிஞ்சரேனடா பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    அவரது மறைவுக்கு மலையாள திரையுலக நடிகர்-நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீர் போசின் இறுதிச்சடங்கு வருகிற 5-ந்தேதி நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

    • ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.
    • ஷங்கர் அதை கைவிடாமல் சில வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து அந்த படத்தை இயக்கினார்.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் முதலில் கமல்ஹாசனை நடிக்க வைக்க ஷங்கர் அணுகியதாகவும் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகியதால் ரஜினிக்கு கைமாறியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனை கமல்ஹாசனே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது, ''எந்திரன் படத்தை எடுக்க நானும் ஷங்கரும் 1990-களில் முயற்சி செய்தோம். இந்த படத்துக்காக எனக்கு மேக்கப் டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது.

    ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் சம்பளம் போன்ற சில பிரச்சினைகள் காரணமாக அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக அந்த படத்தை எடுப்பது பாதுகாப்பு அல்ல என்று தோன்றியது. அதனால் நான் நடிக்கவில்லை.

    ஆனால் ஷங்கர் அதை கைவிடாமல் சில வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து அந்த படத்தை இயக்கினார். அது பெரிய வெற்றி பெற்றது'' என்றார்.

    அதன் பின் எந்திரன் 2.0 படத்தில் முதலில் கமல்ஹாசன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியது எனவும், அப்போது கமல் மற்ற படங்களில் கமிட் ஆயிருந்ததால் அவரால் நடிக்க இயலவில்லை. என்று சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
    • 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

    தமிழ் திரையுலகில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் - க்கு அடுத்து சினிமாவின் ஜாம்பவான்களாக இருப்பது கமல்ஹாசன் மற்றும் ரஜினி மட்டும் தான். இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். பலப் பேர் இந்த சினிமாத்துறையில் நாயகர்களாக வரவேண்டும் என்று வந்து சிலப்படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன எத்தனையோ நடிகர்களை பார்த்து இருக்கிறோம். 1975 ஆரம்பித்த திரைப்பயணத்தை இன்றும் 50 வருடங்களாக தன்னுடைய நிலையை தக்கவைத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.

    கமல்ஹாசன் தமிழ் சினிமாவை உலகமெங்கும் கொண்டு சென்ற ஒரு உலகநாயகன், தான்  நடிக்கும் படங்களாக இருக்கட்டும், இல்லை இயக்கும் படங்களாக இருக்கட்டும் எது செய்தாலும் அதனை உலக தரத்தில் செய்வது அவரது வழக்கம். 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார்.

    இந்த இருஜாம்பாவன்களும் அவர்களின் இளம் பருவத்தில் இணைந்து 16 படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பில் வெளிவந்த அபூர்வ ராகங்கள்,அவள் அப்படித்தான், 16 வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தில்லு முல்லு ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் ஹிட் ஆனது.

     

    ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா துறையில் இருவருக்கும் ஒரு பெரிய மார்க்கெட் உருவாகியதும் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்தனர். படத்தின் ஒன்றாக நடிக்காவிட்டாலும் கலை நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொள்வர். சமீபத்தில் கமல்ஹாசன் , அவர் ஏன் ரஜினிகாந்துடன் இணைந்து இத்தனை வருடங்கள் நடிக்கவில்லை, எதிர்காலத்தில் நீங்கள் ஒன்றாக நடிப்பதற்கோ இல்லை கவுரவ தோற்றத்தில் நடிப்பதற்கு எதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு அவர் " நாங்கள் இணைந்து நடிப்பது என்பது புதிதில்லை, நாங்கள் பலப் படங்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம். ஆனால் ஒருக்கட்டத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தோம். நாங்கள் போட்டியிடும் போட்டியாளர்கள் கிடையாது. துறையில் எப்பொழுதும் போட்டிகள் நிலவுவது சகஜம் தான், அவருடைய பாதை வேறு என்னுடைய பாதை வேறு. இதை நாங்கள் இப்பொழுதல்ல எங்களுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்ட முடிவு" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கார்த்திக்கு.
    • மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியாவர் கார்த்தி.

    இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கார்த்தி அறிமுகமாகினார். நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கார்த்திக்கு.

    அதைத்தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். 2017 ஆம் ஆண்டு எச்,வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மிகவும் திரில்லராக எடுத்து இருப்பார் எச் வினோத்.

    பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கைதி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கார்த்தி திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

    கார்த்தி ஜப்பான் திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்திற்கு பிறகு கார்த்தி சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்து முடித்து விட்டு லோகேஷ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கடுத்து எச். வினோத் இயக்கத்தில் தீரன் பாகம் 2ல் நடிக்கவுள்ளார்.

    எச்.வினோத் தளபதி 69 படத்தை இயக்கி முடித்தப்பின் தீரன் பாகம் இரண்டை இயக்கவுள்ளார். இவ்வாறு கார்த்தி பல சுவாரசியமான லைன் அப்ஸில் உள்ளார். அடுத்து வெளிவரும் கார்த்தி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்துள்ளார்
    • விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

    கடந்த ஆண்டு லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் மிகவும் வைரலாகியது அதைத்தொடர்ந்து விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாம் பாடலான சின்ன சின்ன கண்கள் பாடலும் வெளியாகியது. படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    சமீபத்தில் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்று 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கினார்.

    இதனிடையே அரசியலில் குதித்த விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

    இதனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இதுக்குறித்த அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×